Friday, February 6, 2009

ஏங்குகிறேன் அம்மா...

ஏங்குகிறேன் அம்மா...
கடைக்குப் போய் கருவேப்பிலை கொத்தமல்லி வாங்கி வரச் சொன்னாய்...
அப்பொழுது கடுப்பாக இருந்தது...
ரேஷன் கடையில் க்யூவில் நிற்கச் சொன்னாய்...
அப்பொழுது வெறுப்பாக இருந்தது...
காலையில் அவசரமாக பள்ளிக்குக் கிளம்பும் நேரம் சாப்பாட்டுக்கூடைக்கு
நிற்கச்சொன்னபோது கோபமாக இருந்தது...
அன்று...

இன்று...
உனக்காக அதெல்லாம் செய்யக்காத்திருக்கிறேன்...
ஆனால் நீயோ அங்கு, நானோ இங்கு...
நம்மிருவருக்கும் இடையில் ஒரு நாள் பயண நேரம்...

இப்படி இருக்கும் என்று முன்னாலே நீ சொல்லி இருந்தால்
நான் வேலைக்கு இங்கு வந்திருக்க மாட்டேன்

பழைய நாட்களைத் தேடி நான் ஏங்குகிற வேளையில்,
உனக்காகக் கடைக்குச்செல்ல ஒருவர் அங்கு இல்லை
என்பது வெகு நேரம் கழித்தே விளங்குகிறது எனக்கு...

கஷ்டப்படுவது நீயா நானா... யாராயினும் ஏங்குகிறேன் அம்மா...